திருவேங்கடவனின் திருவுருவம் — 2

ஒம் நமோ வேங்கடேசாய!

ஒவ்வொரு சூழ்நிலை மற்றும் வகைக்கேற்ப மூர்த்தியின் அம்சங்களும், ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கோஷ்ட மூர்த்தங்கள்/ தெய்வங்களைப் பொறுத்து மூன்று தரமாக் கோயில்கள் பிரிக்கப்படுகின்றன. இவை உத்தமம், மத்யமம் மற்றும் அதமம் (சிறந்த, நடுத்தர மற்றும் குறைந்த வகை) ஆகும்.

1. உத்தமம் கோவிலில், பிரம்மா, சங்கரர், மார்க்கண்டேயர், பிருகு, சனகர், சனந்தனர், சனத்குமாரர் முதலிய துணை தெய்வங்களுடன் மூர்த்தி தொடர்புடையதாக இருக்கும்.

2.மத்யமம் கோவிலில், பிரம்மா மற்றும் சங்கரரைத் தவிர மற்ற அனைத்தும் தவிர்க்கப்படுகின்றன.

3. அதம வகையில், மூல மூர்த்தி தனியாக இருப்பார்

மேலே உள்ள விதி யோகம், போகம் மற்றும் வீர மூர்த்திகளை நிறுவுவதை நிர்வகிக்கிறது. அபிசார மூர்த்தியைப் பொறுத்தவரை, அதம வகை கோவில்கள் மட்டுமே உள்ளன

ஆகம விதிகளின் விரிவான ஆய்விலிருந்து, திருவேங்கட மூலமூர்த்தியைப்பற்றி (த்ருவ பேரர்) பின்வரும் இரண்டு முடிவுகளுக்கு மட்டுமே வர முடியும்.

1. திருமலையில் உள்ள மூலமூர்த்தி ஆகமங்கள் தோன்றுவதற்கு முன்பு உருவாக்கியிருக்கலாம், அல்லது

2. இறைவன் சுயம்புவாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்

ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு.,அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை.

1. வானமாமலை

2. ஸ்ரீமுஷ்ணம்

3. திருவேங்கடம்

4. ஸ்ரீரங்கம்

5. பதரிகாசிரமம்

6.சாளக்கிராமம்

7. ராஜஸ்தானில் புஷ்கரம்,

8. நைமிசராண்யம்

--

--