Janmashtami — கண்ணன் மீது ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள்

Ranga rajan chakkara
7 min readAug 30, 2021

--

12 Alwars of Ramanuja Sampradaya had showered poems on our Lord.

Radhakrishna, Mathura

பொருள்கையுண்டாய்ச்செல்லக்காணில் போற்றினெற்றேழுவர்

இருள்கொள்துன்பத்திமைகாணில் என்னேயென்பாருமில்லை

மருள் கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு

அருள் கொளாளாயுய்யவல்லால் இல்லைகண்டீரரணே (நம்மாழ்வார்)

Seeing you walk in affluence, they will come forward to wish you. Seeing you in poverty, not one will ask what happened. The Lord was born in Mathura to destroy wicked Asura, Love and serve him other than him there is really no refuge

Lord killing Puthana

அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று

மிடைந்தது பாரத வெம்போர், — உடைந்ததுவும்

ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்

பேய்ச்சிபா லுண்ட பிரான் (பேயாழ்வார்)

வான்போன்ற பற்களையுடையளான பூதனையினுடைய முலைப்பாலை உண்டு அவளை முடித்தவனான ஸ்வாமியானவன் பள்ளிக்கொண்டது

சேஷசயனத்தின் மேலாம் முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்களுக்காக நெருங்க நடத்தினது கடுமையான பாரதயுத்தமாம்,

அஞ்சி நின்றதும் இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான மத்துக்காகவாம், அந்தோ!

Can the world understand this wonder? The Lord who reclines in the ocean-deep came as a wonder child and killed on ogress. He conducted the great Bharata war and destroyed mighty kings. And yet he cringed in fear when his mother threatened him with a churning rod for stealing butter!

Krishna, Vrindavan

மாலே! நெடியோனே! கண்ணனே, விண்ணவர்க்கு

மேலா! வியந்துழாய்க் கண்ணியனே, — மேலால்

விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்

அளவன்றால் யானுடைய அன்பு (பூதத்தாழ்வார்)

ஸர்வஸ்மாத்பரனே! ஸ்ரீக்ருஷ்ணனே! நித்யஸூரிகளுக்குத் தலைவனே! அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!

முன்னொரு காலத்தில் விளங்காயை ஒரு கன்றைக் கொண்டு உதிர்த்துத்தள்ளினவனே!, (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற

அன்பானது என்னளவில்அடங்கி நிற்பதன்று.

O My Love! O Ancient Lord! My krishnal Lord labove the celestials Lord wearing a fresh Tulasi garland Lord who felled the wood-apples with a calf! Alas, I cannot contain my love !

Govardhana Parvat

மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,

சிலையால் மராமரமேழ் செற்று, — கொலையானைப்

போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்

காக்கோடு பற்றியான் கை (பொய்கையாழ்வார்)

கோவர்த்தன கிரியைக்கொண்டு குடையாகப் பிடித்தும், குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய வாயைப்பிளந்தும்,

வில்லைக்கொண்டு ஸப்த ஸாலவிருக்ஷங்களை அழித்தும், (இச்செயல்களோடு நிற்காமல்) கொலைசெய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய

சண்டைசெய்ய உதவியாயிருந்த தந்தங்களை பிடுங்கினவையும். பூ வோடுகூடிய குருந்த மரத்தை வேரோடே பறித்துத் தள்ளினவையும் (எவையென்றால்)

(கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தையொத்த சங்கை ஏந்தியிருக்கின்ற பெருமானுடைய திருக்கைகளேயாகும்.

A hill, inverted, became an umbrella to protect the cows. The Lord fore the horse kesin’s jaws and pierced an arrow through seven trees, plucked a tusk of the rutted elephant, and destroyed the Kurundu trees, Such is the power in the lord-of-Venkatam’s hands!

Guruvaryurappan, Kerala

தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த

எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,

முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்

அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே (திருமங்கையாழ்வார்)

ஊர்போலும் — திவ்யதேசமாகும்.

மேகமானது (யாகஞ் செய்வதற்கு) முன்னமே மழை பெய்யப்பெற்றதும், கிழத்தனமற்ற உருவத்தை யுடையரான பிராமணர்கள்

முச்சந்தியும் அக்நிஹோத்ரம் செய்யப்பெற்றதுமான அழகுமிக்க திருவீதிகளை யுடைய திருவழுந்தூரென்னுந் திருப்பதியானது,-

தகப்பனாராகிய வஸுதேவருடைய காலிலே (பூட்டப்பட்டிருந்த) பெரிய விலங்குப்பூட்டு இற்றுவிழும்படியாக நடுநிசியிலே

திருவவதரித்த எம்பெருமான் நித்யவாஸஞ் செய்யப்பெற்ற திவ்யதேசமாகும்.

The Lord in the yore took birth in the dead of the night, releasing his father from shackles. He resides in Alundar laid out with beautiful streets where youthful Vedic seers perform fire sacrifices thrice a day ensuring rain

Udupi Krishna

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்

பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்

நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்

அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே (மதுரகவி ஆழ்வார்).

(உடம்பிலே உறுத்தும்படி பல) முடிகளையுடைத்தாய் (உடம்பிலே அழுந்தும்படி) நுட்பமாய் (எட்டம்போராதபடி) சிறிதாயிருக்கிற கயிற்றினால்

யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய் எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனைவிட்டு,

(ஆழ்வாரைக்) கிட்டி ஆச்ரயித்து தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று (அவரது திரு நாமத்தைச்) சொன்னால்.

பரமபோக்யமாயிருக்கும்;என் ஒருவனுடைய நாவுக்கே அம்ருதம் ஊறா நிற்கும்.

Here on a spinout leash of rope the wonder-child my Lord was held. But more, the mouth is nectar-welled when Kurugur Nambi’s name is spelled.

Ranchhod ji, Gujarat

ஆலமாமரத்தி னிலைமே லொருபாலகனாய்

ஞாலமேழு முண்டா னரங்கத் தரவி னணையான்

கோலமாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்

நீலமேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே (திருப்பாணாழ்வார்)

பெரிதான ஆலமரத்தினுடைய (சிறிய) இலையிலே ஒரு சிறு பிள்ளையாகி ஏழுலகங்களையும் திருவயிற்றிலேவைத்து நோக்கினவனும்

கோயிலிலே திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின்மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய அழகிய சிறந்த

ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும் முத்துவடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)

எல்லைகாண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும் ஒப்பற்ற அழகையுடையதும்

கருநெய்தல் மலர் போன்றதுமான திருமேனியானது எனது நெஞ்சினுடைய

அடக்கத்தை கொள்ளை கொண்டு போயிற்று;

He swallowed seven worlds and lay as a child on a fig leaf. He reclines on a serpent in Arangam. He wears a beautiful gem-set garland and a necklace of pearls on his dark frame. Aho, his matchless beauty has stolen my heart!

Dwarakadeesh, Gujarat

மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்

உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்

அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை

கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே (தொண்டரடிப்பொடியாழ்வார்)

தத்துவஞானமில்லாத மனிதர்களே (நான் சொல்லுகிறவனைத்) தவிரவும் (சரணமாக அடையக் கூடிய வேறு) ஒரு தெய்வம் உண்டோ? (இல்லை)

நீங்கள் (சரணமடைந்த அந்த க்ஷுத்ரதேவர்கட்கு) ஒரு ஆபத்து நேர்ந்த காலத்திலல்லாமல் (மற்றைக் காலத்தில்) (நான் சொல்லுகிற இவன்) ஒருவனே கடவுள் என்பதை

அறியமாட்டீர்கள் (நீங்கள் இப்படி அறியாமைக்குக் காரணமென்னவெனில்; வேதத்திலே) (பதப்பொருளுக்கு) மேற்பட்ட மறைபொருளை (தாத்பரியத்தை)

சிறிதும் அறியமாட்டீர்கள்; (இனி முடிவுப்பொருளை நீங்கள் உணருமாறு கூறுவேன்;) அந்த எம்பெருமான் தவிர (சரணமடையக்கூடிய) தெய்வம் (வேறொன்று) இல்லை; (ஆகையால்)

கன்றுகளின் கூட்டங்களை (மிக்க உகப்போடு), மேய்த்து வந்த எமது ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய இரண்டு திருவடிகளையும் நீங்கள் சரணமாகப் பற்றுங்கள்.

Can there be another god? O Foolish men on Earth! Unless there is a calamity, you will never realize the truth. Nor do you know the Sastras, other than him, there is no god. Worship the feet of my Lord who walked on earth grazing cows!

Shrinathi, Rajasthan

ஆனைகாத்தொ ரானைகொன்ற தன்றியாயர் பிள்ளையாய்

ஆனைமேய்த்தி யானெயுண்டி அன்றுகுன்ற மொன்றினால்

ஆனைகாத்து மையரிக்கண் மாதரார்தி றத்துமுன்

ஆனையன்று சென்றடர்த்த மாயமென்ன மாயமே (திருமழிசையாழ்வார்)

கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி அவ்வளவேயல்லாமல் கோபாலகுமாரனாகி குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று பசுக்களை

மேய்த்தருளா நின்றாய்; பசுக்களின் நெய்யை. அமுது செய்யா நின்றாய்; இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில் கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு

பசுக்களை ரக்ஷித்து மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக அக்காலத்திலே அவளெதிரே நின்று

ஆனை அடர்ந்த மாயம் எருதுகளேழையுங் கொன்ற ஆச்சரியம் என்ன ஆச்சரியம்!

You saved an elephant in distress, you killed an: elephant in the rut. You came as grazing cowherd lad and ate the stolen white butter. You lifted high the mountain and you stopped the foaming rains above. You killed the bulls in contest for the dark eyed lady Nappinnai!

Vittoba, Maharashtra

ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ

வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ

ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை

நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே

ஆலையிலிட்டு ஆடத்தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே! (உனக்குத்) தாலாட்டு தாமரை போன்று விசாலமான திருக்கண்களை உடையவனே!

தாலோ — தாலேலோ;- கடலின் நிறம்போன்ற நிறத்தையுடையவனே!. தாலேலோ யானைக்குட்டி போன்றவனே! தாலேலோ;

பரிமளம் மிக்கு நீண்ட திருக்குழலையுடைய! என்மகனே! தாலேலோ; இப்படி பலகாலுஞ்சொல்லி

என்வாய் திருப்தியடையும்படி உன்னை தாலாட்டுகையாகிற ஸம்பத்து இல்லாத தாய்மார்களில் கடையான தாயாயிரா நின்றேன் நான் (என்கிறாள் தேவகி) (குலசேகர ஆழ்வார்)

“Sleep, Little child, sweet as sugarcane, Talelo! Sleep, O Lord of lotus-like eyes, Talelo! Sleep, O Lord of ocean-hue, Talelo! Sleep, my baby-elephant, Talelo! Sleep my child with long fragrant hair, Talelo!”: Alas, I am not fortunate to sing your lullaby thus. Indeed I am the lowliest of lowly mothers.

Puri Jagannath

ஆண்டாள்

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் கலிவு பட்ட) இந்த லோகங்களை (இரண்டடியால்) அளந்தருளினவனே! (உன்னுடைய அத்) திருவடிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க’பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில் கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,)

எறிதடியாக் (கொண்டு) (கபித்தாஸுரன் மீது எறிந்தருளினவனே (உன்னுடைய) திருவடிகள் போற்றி!-’ கோவர்த்தனகிரியை

குடையாக தூக்கினவனே; (உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள் போற்றி!-’

(பகைவரை) ஜபித்து த்வேஷத்தை எழுந்தருளி (அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை அழித்தருளினவனே! (உன்னுடைய) மிடுக்கு பல்லாண்டு வாழ்க’ சகடாஸுரன் முடியும்படி (அச்சகடத்தை) உதைத் தருளினவனே! (உன்னுடைய) கீர்த்தியானது போற்றி!- அழிக்கின்ற உனது திருக்கையிலுள்ள வேல் வாழ்க’

என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக்கொண்டு உன்னுடைய வீர்யங்களையே புகழ்ந்து கொண்டு அடியோம் இப்போது

பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம் கிருபை பண்ணியருள்’

Glory is to your feet that spanned the Earth as Vamana. Glory is to your strength that destroyed Lanka as Kodanda Rama. Glory is to your fame that smote the bedeviled cart as Krishna in the cradle. Glory is to your feet that threw and killed the demon-calf Vatsasura. Glory is to your spear that overcomes all evil. Praising you always humbly we have come to you for boons. Bestow your compassion on us.

Krishna, Gokul

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி

ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ! (பெரியாழ்வார்)

மாணிக்கத்தை (இரண்டருகும்) கட்டியும் நடுவில் வயிரத்தை கட்டியும் மாற்றுயர்ந்த பொன்னால் செய்யப்பட்ட அழகிய சிறிய தொட்டிலை

சதுர்முகனானவன் விரும்பி உனக்கு அனுப்பினான் ப்ரஹம்சாரிவாமநாவதாரம் பண்ணின கண்ணனே! தாலேலோ!

உலகங்களை (த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே! தாலேலோ!

O, Lord Trivikrama, , — Brahma has sent you this little golden cradle studded with rubles and diamonds, — You measured the Earth,

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

--

--

No responses yet

Write a response