அஷ்டதிக்_பாலகர்கள்

<A forward>

இவர்கள் அஷ்டதிக்_பாலகர்கள்.

எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர்.

இந்திரன்,

அக்னி தேவன்,

எமதருமன்,

வருண பகவான்,

நிருதி பகவான்,

வாயு பகவான்,

குபேரன்,

ஈசானன் ஆகிய

எட்டுபேரும்

அஷ்ட திக் பாலகர்கள்

என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு திசையின் நாயகர்களான இவர்கள் ,

தம்தம் வாகனங்களில் அமர்ந்துள்ளனர்.

நடுவில் தாண்டவ கோலத்தில் ஈசன் நடனமாடுகிறார்.

(1)கிழக்குதிசை அதிபதி இந்திரன், மனைவி இந்திராணியுடன் ஐராவத யானைமீதும்,

(2) தென்கிழக்கு திசை அதிபதி அக்னி, மனைவி சுவாஹா தேவியுடன் ஆட்டுகிடா மீதும்,

(3) தெற்கு திசை அதிபதி எமன், மனைவி குபேரஜாயையுடன் எருமைமீதும்,

(4) தென்மேற்கு திசை அதிபதி நிருதி, மனைவி கட்கியுடன் பிரேதம் வாகனமீதும்,

(5) மேற்கு திசை அதிபதி வருணன், மனைவி வருணியுடன் மகரத்தின்மீதும்,

(6) வடமேற்கு திசை அதிபதி வாயு, மனைவி வாயுஜாயையுடன் மான்மீதும்,

(7) வடக்கு திசை அதிபதி குபேரன், மனைவி யட்சியுடன் மனித வாகனமீதும்,

(8) வடகிழக்கு அதிபதி ஈசானம், மனைவி ஈசானஜாயையுடன் காளை மீதும் வீற்றிருக்கும் இவர்கள் எண்திசை காவலர்களாகிய அஷ்டதிக்பாலகர்கள் ஆவர்!

நடுநாயகமாக இவர்களின் நாயகனான, படுத்திருக்கும் வாஸ்து புருஷன் என, கோவிலின் விதானத்தில் சிற்பியின் சிறந்த கைவண்ணம்!!

--

--