ஆழ்வார்கள் பாடிய திருமாலிருஞ்சோலை
ஆழ்வார்கள் அறுவர் இத்தலத்தின் மேல், 128 பாசுரங்கள் இயற்றி இருக்கின்றனர்-
பெரியாழ்வார் , ஆண்டாள், பேயாழ்வார் ,
திருமங்கையாழ்வார் , பூதத்தாழ்வார் — 3 மற்றும்
நம்மாழ்வார்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்
திருமலை அதுவே அடைவது திறமே
திருமலையைப் போல், அழகர் மலையையும், ஆழ்வார்கள் சிறப்பித்துப் பாடியிருக்கின்றனர் . பெரியாழ்வார், இதைக் கோவர்த்தனத்துடன் ஒப்பிடுகிறார்.
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வான் நாட்டினின்று மாமலர்க் கற்பகத் தொத்து இழி
தேன் ஆறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே
பிறிதொரு இடத்தில், தங்களுடைய பைந்தமிழால், இம்மலையை, ஆழ்வார்கள் கொண்டாடுகின்றனர்
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே