திருப்பாவை திருவெம்பாவை ஒற்றுமை
இன்றைய திருவெம்பாவை (16) பாட்டு, திருப்பாவையில் உள்ள நான்காம் பாடலை நினைவூட்டுகிறது
திருவெம்பாவையின் பாடலுக்கான விளக்கம் கீழே உள்ளது;
இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.
திருப்பாவை பாடலின் பொருள்:
— — — — — — — — — — — — — — — — — — — — — — — —
கடல் போன்ற கம்பீரமுடைய மழைத்தேவனே, நீ எதையும் கையில் மறைத்து வைத்துக்கொள்ளாதே. நீ கடலில் புகுந்து, நீரை மொண்டு, பெரும் ஆரவாரத்தோடு, ஆகாயத்தில் எழுந்து வா. காலமும், கரணமும் எம்பெருமானது திருமேனி போல்,கறுத்து வலிமை வாய்ந்த தோள்களை உடைய திருமாலின், சுதர்சன சக்கரம் போல் மின்னி, அவன் வலம்புரி சங்கில் எழும் ஒலி போல் இடிஇடித்து, பெருமான் வில்லிலிருந்து பாய்ந்து வரும் அம்பு போல், மழையாக பெய்து பூமியை குளிரச்செய்ய வேண்டும்.
within brackets திருப்பாவையின் வரிகள். என்ன ஒற்றுமை!ஓம் நமோ நாராயணாய!
ஓம் நமச்சிவாய!
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் — திருவெம்பாவை
(ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி) — திருப்பாவை
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
(ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து)
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
(பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி)
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
(வலம்புரிபோல்நின்றதிர்ந்து)
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
(தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல்)
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
(வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய்.)