வேண்டும் வேண்டும் பஞ்சாயத்து ராஜ்
1990களில் , நாடாளுமன்றத்தில், பஞ்சாயத்து ராஜ் மசோதா நிறைவேற்றப்பட்டு, 11ஆம் அட்டவணைப்படி, அவர்களுக்கு அதிகாரம் பங்களிக்கப்பட்டது. பலரின் கனவு மெய்ப்பட்டது. அதற்கான முக்கிய காரணங்கள்:
1. மத்திய/மாநில சர்க்கார்களால், அனைத்து துறைகளிலும், ஒழுங்காக வேலை செய்ய முடியாது. ஏனோ-தானோ வென்று, இப்ப இருக்கும் ஊழியர்கள் நல்ல உதாரணம். அதிலும் விதி-விலக்குகள் உண்டு. Fatter governments are not mobile.
2. பாரம்பரியமாக, மக்கள் குடிமராமத்து போன்ற சமுதாயமாகச் செய்யும் வேலைகளைச் செய்து வந்தார்கள். இது பயனாளிகளின் பொறுப்பை அதிகரித்தது. முக்கியமாக, அலட்சியம் மற்றும் பராமுகம் குறைந்தது.
3. தொலைத்தொடர்பு, அயல்நாட்டு உறவு மற்றும் இராணுவத் துறைகளில் அரசாங்கத்தின் நேர்முக பங்களிப்பும் மற்ற துறைகளில் மேற்பார்வையும் இருந்தால் போதும்.
ஆனால், அந்த பங்களிப்பு சரிவர நடக்கவில்லை.
இந்தப் பேரிடர் நமக்கு உணர்த்தும் பாடம் — மக்கள் தாங்கள் சார்ந்த இடத்தில், சமுதாயத்தில் அதிகம் பங்களிப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால், கட்சிக்காரன் பணத்தைச் சாப்பிடுவான். நாம்தான் அல்லல் படவேண்டும்